முதல்வர் எடப்பாடி பழனிசாமி நழுவவிடுகிறார் என்றால், அதன் பின்னணியில் பெரிய அரசியல் ஏதேனும் இருக்கும்

ஜனாதிபதி அழைப்பை ஏற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அந்த விருந்தில் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் சென்னையில் ஜெயலலிதா பிறந்தநாள் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு இன்று பிற்பகல் சேலம் புறப்பட்டு சென்றுவிட்டார். அப்போது கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் இது தொடர்பாக கேள்வி எழுப்பிய போது, ஜெயலலிதா பிறந்தநாள் நிகழ்ச்சிகள் இருப்பதால் தன்னால் டிரம்புக்கு ஜனாதிபதி கொடுக்கும் விருந்தில் கலந்துகொள்ள முடியாத சூழல் எனக் கூறினார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனக்கு கிடைத்த நல்லதொரு வாய்ப்பு தவறவிடுவதாகவும், இந்த விருந்தில் அவர் பங்கேற்பது அவரது அரசியல் வாழ்க்கையில் புதிய மைல்கல்லாக இருக்கும் எனவும் அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். இப்படியொரு வாய்ப்பை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நழுவவிடுகிறார் என்றால், அதன் பின்னணியில் பெரிய அரசியல் ஏதேனும் இருக்கும் என அவர்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர். ஒருவேளை மத்திய அரசு தரப்பில் இருந்து சிக்னல் கிடைக்கவில்லையா என்ற கோணத்திலும் அவர்கள் ஐயம் எழுப்புகின்றனர்.