அமெரிக்க அதிபர் டிரம்ப் இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள நிலையில் அவருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாளை டெல்லியில் விருந்து அளிக்கிறார். ஜனாதிபதி மாளிகையில் அளிக்கப்படும் இந்த விருந்தில் கலந்துகொள்ளுமாறு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உட்பட அனைத்து மாநில முதல்வர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. மேலும், எதிர்க்கட்சியான காங்கிரஸில் ஆதின் ரஞ்சன் சவுத்ரிக்கும், குலாம் நபி ஆசாத்திற்கும் ராம் நாத் கோவிந்த் அழைப்பு விடுத்துள்ளார். சோனியா, ராகுல், மன்மோகன் உள்ளிட்ட மற்ற எந்த தலைவர்களுக்கும் அழைப்பு இல்லை.
டிரம்புக்கு ஜனாதிபதி விருந்து... அழைப்பை புறக்கணித்த இ.பி.எஸ்