இது தொடர்பாக அதிமுக வட்டாரத்தில் பேசிய போது, டிரம்பை விட அம்மா தான் தனக்கு முக்கியம் என்பதை எங்களுக்கு உணர்த்திவிட்டார் முதல்வர். அம்மாவின் பிறந்தநாள் பொதுக்கூட்டம் சேலத்தில் நடைபெறுகிறது, அதைத்தொடர்ந்து ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் இருக்கின்றன.
இப்படி தொடர் நிகழ்ச்சிகள் இருப்பதால் திடீரென அதை தள்ளி வைத்தாலோ, ரத்து செய்தாலோ பயனாளிகள் ஏமாற்றம் அடைவார்கள் என்பதால் சி.எம்.டெல்லி செல்லவில்லை எனத் தெரிவிக்கின்றனர்.